×

டெல் நிறுவனத்தில் 6,650 பேர் டிஸ்மிஸ்

வாஷிங்டன்: உலக சந்தையில் கணினிகளுக்கான தேவை குறைந்ததால் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கம்ப்யூட்டர் நிறுவனமான டெல் நிறுவனம் சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும். இதேபோன்ற பணிநீக்கம் 2020 ல் கொரோனா தொற்றுநோய் பரவலின் போது அறிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டில் நான்காவது காலாண்டில் தனி நபர் கம்ப்யூட்டர்களுக்கான ஏற்றுமதி கடுமையாக குறைந்தது. இதனால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Dell , 6,650 layoffs at Dell
× RELATED பணிநீக்க நடவடிக்கையில் இணைந்த Dell நிறுவனம்!