தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தூய ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வெற்றிக்காகவும், அவர்களை சிறப்பாக தேர்வுக்கு தயார்படுத்தவும் இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபகர் பால் தினகரன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தும் விதமாக, பால் தினகரன் பாடல்கள் பாடி, செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார். மேலும், எழுச்சியூட்டும் செய்திகளுக்கு இடையே, இதற்கு முன்பு நடந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று அதிக மதிப்பெண்களும், பரிசுகளும் பெற்ற மாணவர்களின் சாட்சிகள், பங்குபெற்ற மாணவ-மாணவியரை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. கூட்டத்தில், இவாஞ்சலின் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாமுவேல், ஸ்டெல்லா ரமேலாவின் சிறப்பு பாடல்கள் மாணவ-மாணவிளுக்கு உற்சாக மூட்டியது.

Related Stories: