×

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 5 தினங்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேகா மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நிறத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை நாமக்கல்லில் 14.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Research Centre , Tamil Nadu, Puducherry,, Moderate, Rain, Weather, Center, Information
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...