650வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகி குரு ரவிதாசின் படத்திற்கு மரியாதை-சித்தூரில் நடந்தது

சித்தூர் : சித்தூரில் 650வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகி குரு ரவிதாசின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி குருரவிதாசின் 650வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சித்தூர் காந்தி சிலை அருகே அவரது படத்திற்கு பாஜவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜ கட்சி மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் பாபு தலைைம தாங்கி பேசியதாவது:

குரு ரவிதாஸ் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். அவர் வயதிலேயே மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயரை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாஜ கட்சி சார்பில் மற்றும் இந்து அறநிலைத்துறை சார்பில் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம்.

அதேபோல், இன்று(நேற்று) சித்தூர் காந்தி சிலை அருகே அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் பேசினார். அப்போது பாஜ கட்சி எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் சதீஷ்குமார், துணை தலைவர் நித்தியானந்தா குமார், பொருளாளர் குரு கணேஷ், செயலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: