×

ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில் 10 பேர் உயிரிழப்பு

வியன்னா: ஆஸ்திரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியான டைரோலில் கடந்த 2 வாரங்களான கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், சுற்றுலா சாகச பகுதிகள் அப்பகுதியில் பனிசறுக்கில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மலையின் ஒரு பகுதியில் படர்ந்து இருந்த டன் கணக்கான பனி திடீரென சரிந்தது.

இதில் சிக்கிய 15 சுற்றுலா பயணிகளை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று வியன்னாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் குவிந்திருந்தனர். அதே இடத்தில் மீண்டும் பனி மலையின் மற்றொரு பகுதி சரிந்து திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பாலியானர். மேலும் பலரை காணாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Austria , Austria, Avalanche, Tons, Count, Casualties
× RELATED ஆஸ்திரியாவில் வித்தியாசமான பந்தயம்…...