×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு  வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என ஓ.பி.எஸ் தஹ்ராபி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்படுவதாகவும் இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.



Tags : Erode East Intermediation O. GP S.S. ,senthil murugan , Erode ByeElection, Erode Election, OPS
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சியின் புதிய பணி குழு தலைவர் தேர்வு