×

இமாச்சலின் சாம்பாவின் திடீர் நிலச்சரிவால் பாலம் உடைந்தது: சம்பா-பார்மூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தின் பார்மூர் பகுதியில் உள்ள லூனா என்ற இடத்தில் நிலச்சரிவின் போது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. 20 மீட்டர் நீளம் உள்ள பாலத்தின் மீது அந்த பாறை விழுந்ததால் சம்பா-பார்மூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

இதனால், ராவி நதியில் இறங்கி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் நடந்து செல்கின்றனர். மீண்டும் பாலத்தை கட்டமைக்க பல நாட்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த 3-ம் தேதி அதே மாவட்டத்தில் உள்ள சோலி பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் அருகே இருந்த 2 வாகனங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.  


Tags : Himachal ,Chamba ,Chamba-Barmur National Highway , Himachal, Champa, Landslide, Bridge, Transport, Disconnection
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...