×

நண்பரை கண்டிக்காத பிரதமர்: நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம்!

டெல்லி: அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்துகிறது. ஹிண்டர் பர்க் ஆய்வறிக்கையினால் அதானி குடும்பம் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்திருக்கின்ற நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கியிருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து பாராளுமன்றத்தை இரண்டு நாட்களாக முடக்கம் செய்துள்ளார். இதற்கிடையில் நாடு முழுவதும் இன்று எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் நண்பரான அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் புகார்கள் குறித்து இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மௌனம் காத்து வருகிறார். இதை கண்டித்து காங்கிரஸ் நாடு முழுவதும் இன்று போராட்டத்தை நடத்துகிறது.

இந்தப் போராட்டத்தின் மூலம் மக்களுக்கு பதில் தர தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் போராட்டத்தால் நாடு முழுவதும் பரபரப்பு எழுந்துள்ளது.

Tags : Congress party , Prime Minister who did not condemn his friend: Nationwide Congress party protest today!
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...