×

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் ஜப்பான் பயணம்!

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார். இந்த பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய முன்னோடி நாடாக ஜப்பான் நாடு உள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் பின்பற்றும் சிகிச்சை நெறிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000-80,000 புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பை அறிய சுகாதாரத்துறை குழு ஜப்பான் செல்கிறது. ஜப்பானில் புற்றுநோய் மேலாண்மையை கண்காணித்து தமிழகத்தில் சிகிச்சை திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Health Minister ,M. Subramanian ,Japan , Health Minister M. Subramanian 5-day trip to Japan!
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்