தாய்லாந்து ஓபன் ஜூ லின் சாம்பியன்

ஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜூ லின் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவுடன் (33 வயது, 136வது ரேங்க்) நேற்று மோதிய ஜூ லின் (29 வயது, 54வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் சுரென்கோவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஜூ லின் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 45 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முதல் முறையாக டபுள்யு.டி.ஏ தொடரின் பைனலுக்கு முன்னேறி இருந்த ஜூ லின் அதில் தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: