தென்னாப்பிரிக்காவில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,  காஜல் அகர்வால், சுதீப், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி  சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், குரு  சோமசுந்தரம், கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்பட பலர் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதியில் நடந்து  வருகிறது.

இதில் இளமைக் கால கமல்ஹாசனுக்கான காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்த ஷெட்யூல் முடிந்த பிறகு கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங் மற்றும்  படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்கின்றனர். அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: