×

உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு

குஜராத்: உலக புற்றுநோய் தினத்தையொட்டி குஜராத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உலகை அச்சுறுத்தும் உயிர் கொள்ளி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இடையே நம்பிக்கை மற்றும் துணிவை அளிக்கும் விதமாக உலக புற்றுநோய் தினத்தையொட்டி குஜராத்தின் சூரத்தில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 பெண்கள் கலந்துகொண்டு மேடையில் ஒய்யார நடையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விதவிதமான உடைகளை அணிந்து கம்பிரமாக நடந்து வந்த புற்றுநோயாளிகள் பார்வையாளர்களை குதூகலப்படுத்தியதோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனர். பேஷன் ஷோவில் புற்றுநோயை தடுக்க தீவிரமான மற்றும் உடனடி நடவடிக்கைகள் குறித்து அவசியத்தையும் நிகழிச்சி ஏற்பாட்டாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். 


Tags : Awareness Fashion Show ,World Cancer Day , World Cancer Day Awareness Fashion Show: Audience Welcome
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...