இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்:  இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி பிரச்னை சீரடையாத நிலையில், அங்குள்ள தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவு குறிகட்டுவான் சாலையை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (44), அவரது மனைவி மாலினி தேவி (42), 12 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் இலங்கை தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடியில் வந்திறங்கினர். மரைன் போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: