×

அப்துல் கலாமுக்குப் பிறகு ஜனாதிபதி சிறப்பு ரயிலில் கோவிந்த் இன்று பயணம்: பாரம்பரிய நடைமுறைக்கு மீண்டும் உயிர்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து கான்பூருக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பயணம் செய்கிறார்.  நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத், நாட்டு மக்களை சந்திப்பதற்காக சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் நடைமுறையை ஏற்படுத்தினார். இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ரயில் ‘ஜனாதிபதி சிறப்பு ரயில்’ என்றே அழைக்கப்படுகிறது.  கடைசியாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2006ம் ஆண்டு, மே 30ம் தேதி டெல்லியில் இருந்து டேராடூன் வரை  பயணம் செய்தார். அதன் பிறகு வந்த ஜனாதிபதிகள் ரயில் பயணம் செல்லவில்லை. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் தற்போதைய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த ரயில் மூலம், டெல்லியில் இருந்து இன்று கான்பூர் புறப்படுகிறார். இந்த ரயிலின் மூலம், ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது சொந்த கிராமத்துக்கு கோவிந்த்  செல்கிறார். அங்கு கிராம மக்கள் சார்பாக 27ம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.  28ம் தேதி ரயிலில் லக்னோ செல்லும் அவர், 29ம் தேதி சிறப்பு விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்….

The post அப்துல் கலாமுக்குப் பிறகு ஜனாதிபதி சிறப்பு ரயிலில் கோவிந்த் இன்று பயணம்: பாரம்பரிய நடைமுறைக்கு மீண்டும் உயிர் appeared first on Dinakaran.

Tags : Govindh ,Abdul Khalam ,New Delhi ,President ,Ramnath Kovindh ,Delhi ,Kanpur ,Govind ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...