×

ஃபார்ஸி வெப்சீரிஸ் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

சென்னை: புதிய வெப்தொடரான ‘ஃபார்ஸி’ தொடரின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி சென்னையில் வெளியிட்டார். விஜய் சேதுபதி, பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ தொடர், பிப்ரவரி 10ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. ‘ஃபார்ஸி’ தொடரில் ராசி கன்னா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த வலைதள தொடருக்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர். மேனன் ஆகியோர் கதை, வசனம் எழுதி இருக்கிறார்கள்.

இந்த வலைதள தொடரை டி2 ஆர் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர்களான ராஜ் மற்றும் டி கே தயாரித்திருக்கிறார்கள். இந்தத் தொடருக்கான முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் அரங்கத்தில் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.மேலும் தன் கையொப்பமிட்ட போஸ்டரை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.


Tags : Vijay Sethupathi ,Farsi , Vijay Sethupathi released the Farsi webseries poster
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்