×

இந்தியாவில் விமான போக்குவரத்து சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு

சென்னை: பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், புதிய இந்தியா- பல வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அவர் பேசியதாவது:  விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரையில் உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்து கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2013 -14ல் 70 மில்லியன் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது 144 மில்லியன் பயணிகள் இந்தியாவில் விமானத்தை பயன்படுத்தி உள்ளனர்.

60 மில்லியன் பயணிகள் சர்வதேச விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 400 மில்லியன் ஆக உயரும்.
 சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளது. இந்த மாதம் பிரதமர் மோடி 148வது விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

2013ல் 400 விமானங்கள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும். விமான போக்குவரத்து துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் ஐந்து சதவீதம் பெண் பைலட்டுகள் உள்ள நிலையில், இந்தியாவில் 15% பெண் பைலட்டுகள் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் மற்றும் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Tags : India ,Union Minister ,Jyotiraditya Scindia , Aviation in India has seen remarkable progress: Union Minister Jyotiraditya Scindia's speech
× RELATED இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று...