×

டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோரை விட மற்றொரு வீரர் தான் இந்திய அணிக்கு முதுகெலும்பாக செயல்படுவார் என்பது போல அஸ்வின் கூறியுள்ளார். இரு அணிகளும் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதியன்று நாக்பூரில் தொடங்கவுள்ளது. இதுதான் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பதால் ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமானது என்றாலும், நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

எப்படிபட்ட களம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாத ரிஷப் பன்ட், அதிரடியாக ரன் குவிப்பார். குறிப்பாக அவரை 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் என்றே வல்லுநர்கள் கூறி வருகின்றனர். விபத்து காரணமாக இந்த முறை அவர் மிஸ்சாகியுள்ளார். இதனால் ரிஷப் பன்ட்-க்கு மாற்றாக கே.எஸ்.பரத், இஷான் கிஷான் போன்ற இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் ரிஷப் பன்ட்டின் இடத்தை பூர்த்தி செய்து இந்தியாவுக்கு உறுதுணையாக விராட் கோஹ்லி இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல அவரும் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கம்பேக் தரும் முனைப்புடன் உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட் உடன் அதிகப்போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தான். அப்படி இருந்துமே அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருந்து வருவது ஸ்ரேயாஸ் அய்யர் தான். பன்ட் இல்லாத சமயத்தில் அவர்தான் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார்.

ஸ்ரேயாஸ் அய்யருக்கு தற்போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது போல அஸ்வின் கூறியுள்ளார். முதுகு பிரச்னை காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய ஸ்ரேயாஸ் அய்யர், ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டிலும் விளையாட மாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. 2 வாரத்தில் உடல்நிலை முன்னேறிவிடும் என்பதால் 2வது டெஸ்டிற்கு வந்துவிடுவார் எனத்தெரிகிறது. 2021ல் அறிமுகமான அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 634 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 56.73 ரன்கள் ஆகும்.

Tags : Shreyas Iyer ,Indian ,Ashwin , He has played tremendously in Tests; Shreyas Iyer is the backbone of Indian team: Ashwin says
× RELATED ராய்ப்பூரில் நாளை 4வது டி.20 போட்டி;...