மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருவாரூர்: மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குடி பகுதியில் மழை பாதித்த விளைநிலங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கனமழையால் உளுந்து சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.30,000 வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் அந்த நெல்மணிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நெல் கொள்முதல் குறித்து ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு பேச வேண்டும் என்றும் கூறினார்.   

Related Stories: