×

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழக்க கூடும். தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் பிப்ரவரி 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Tags : Gulf of Kumarakku ,Mannar Gulf ,Chennai Meteorological Inspection Centre , Kumarikadal, Gulf of Mannar deep depression area
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்