விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் சார்பில் ரூ.5 கோடி பங்களிப்பு நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து,  தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை வழங்கினார்கள். பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.

அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினர்.

Related Stories: