வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி, வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல கட்டப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை வழியாக வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உட்பட வாணியம்பாடியையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில், சுரங்க பாதையின் கீழ் பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தினந்தோறும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், தார் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகின்ற இந்த நிலையை போக்க, முறையாக தண்ணீர் வெளியேற வடிகால் அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: