×

54வது நினைவு நாளையொட்டி அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க‌.ஸ்டாலின் மரியாதை: அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கியது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மயிலை த.வேலு, த.இளைய அருணா, மாதவரம் எஸ்.சுதர்சனம், நே.சிற்றரசு, ஜெகத்ரட்சகன் எம்பி, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, எஸ்.ஆர்.ராஜா, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், டாக்டர் எழிலன், வெற்றியழகன், தமிழரசி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு தலைவர் ரங்கநாதன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாநில இணை செயலாளர்கள் பி.டி.பாண்டி செல்வம், வி.பி.மணி, சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் ஜானகி ராமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தி.நகர் வாசுதேவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமைதி பேரணி சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முடிந்தது. அங்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags : Anna memorial ,Chief Minister ,M. K. Stalin , 54th anniversary of Anna memorial in honor of Chief Minister M. K. Stalin: Thousands participate in peace rally
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்