×

மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ஆண்டர்சன் சாலையில் இன்று முதல் 6 மாதம் வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணி மேற்கொள்வதால் ஆண்டர்சன் சாலையில் இன்று முதல் 6 மாதம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவடுதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி மேற்கொள்வதற்காக சோதனை ஓட்டம் முடித்து இன்று முதல் 6 மாதகாலத்திற்கு ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மெட்ரோ  ரயில் கட்டுமான பணி மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் ெநடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. கொன்னூர் நெடுஞ்சாலை - மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல  வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

கொன்னூர் நெடுஞ்சாலை - மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை - மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். கொன்னூர் நெடுஞ்சாலை - மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை - மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.
கான்ஸ்டிபள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கனரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை - பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை, போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம். கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anderson Road , Traffic diversion on Anderson Road from today to 6 months due to metro rail construction work: Police notification
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...