தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு

ஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, சீன வீராங்கனை வாங் ஸின்யு தகுதி பெற்றார். காலிறுதியில் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனுடன் (30 வயது, 160வது ரேங்க்) நேற்று மோதிய வாங் ஸின்யு (21 வயது, 81வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஹீதர் வாட்சன் டை பிரேக்கரில் 7-6 (8-6) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஹீதரின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த வாங் ஸின்யு 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 40 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: