×

பெங்களூருவில் மாஜி பாஜ பெண் கவுன்சிலர் கொலை: தமிழகத்தில் இருந்து சென்று குடியேறியவர்

பெங்களூரு: பெங்களூரு செலுவாதிபாளையாவில் முன்னாள் பாஜ பெண் கவுன்சிலரை  பட்டப்பகலில் 3 பேர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தை  சேர்ந்தவர் கதிரேசன். இவர் பெங்களூருவில் குடிபெயர்ந்து வசித்து வந்தார்.  இவர் பாஜவில் இணைந்து கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில்,  2018ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இவரை மர்மகும்பல் கொலை செய்தது. இவரது  மனைவி ரேகா (45). இவர் பெங்களூரு காட்டன்பேட்டை சரகத்துக்குட்பட்ட பிளவர்  கார்டன் பகுதியில் வசித்து வந்தார். இவரும் 2 முறை  பாஜ சார்பில்  போட்டியிட்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம்  சமீபத்தில் நிறைவடைந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால்  இயன்ற உதவிகளை செய்து வந்தார். பிளவர் கார்டன் பகுதியில் உள்ள  தனது அலுவலகத்துக்கு நேற்று வந்த ரேகா, வழக்கம் போல் மக்கள் சேவையில்  ஈடுபட்டார். பின்னர், வீடு திரும்பினார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் அவரை வழி மறித்து கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.  காயங்களுடன் சாலையில் விழுந்த ரேகாவை மீட்ட மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. …

The post பெங்களூருவில் மாஜி பாஜ பெண் கவுன்சிலர் கொலை: தமிழகத்தில் இருந்து சென்று குடியேறியவர் appeared first on Dinakaran.

Tags : Maji ,Baja ,Bangalore ,Tamil Nadu ,Bengaluru ,Seluwathipalaia ,Nadurode ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...