×

கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 10.37 கிலோ கஞ்சா, 1 செல்போன், ரொக்கம் ரூ.1,000 மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 27.01.2023 முதல் 02.02.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 குற்றவாளிகள் கைது. 10.37 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.1,000 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 29.01.2023 அன்று கொருக்குப்பேட்டை, தியாகப்பா தெரு மற்றும் கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு அருகே கண்காணித்து, சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த அன்பழகி, பெ/வ.28, க/பெ.பரத்குமார், 10வது தெரு, காந்தி நகர், புளியந்தோப்பு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 29.01.2023 காலை, கீழ்பாக்கம், ஹார்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோயில் அருகில் கண்காணித்து, சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பூவரசன், வ/22, த/பெ.வெங்கடேசன், வெள்ளிமேடு பேட்டை, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் மகேஷ், வ/26, த/பெ.ரவணய்யா, காமராஜர் நகர் 9வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (02.02.2023) மதியம், வியாசர்பாடி, திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் தெருவில் டியோ இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து எடுத்து வந்த ஜெயகுமார், வ/20, த/பெ.நாகராஜ், ஏகவல்லியம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் 1 டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : In the last 7 days, 9 cases were registered and 16 criminals were arrested in the special investigation related to narcotics including ganja
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...