இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A–ன் கீழ், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)–ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை (Non Hereditary Trustees) நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டக் குழுவின் தலைவராக க.சுப்பிரமணியம், உறுப்பினர்களாக ப.கலைச்செல்வி, இராம.முத்துராமன், ப.ஜெகநாதன், க.சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டக் குழுவின் தலைவராக ஆ.கலியபெருமாள், உறுப்பினர்களாக மா.சண்முகம், டி.கே.இராமச்சந்திரன், சி.பாஸ்கர், சே.கோகிலாஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (i), 46(ii) – ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள திருக்கோயில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை  நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A(2) –ன்படி  இக்குழுக்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.

Related Stories: