×

போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்

பொகாரோ: ஜார்கண்டில் போலீஸ் அதிகாரி எனக்கூறி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அஸ்லம் கான் என்பவர், 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அஸ்லம் கான் (50) என்பவர், தன்பா அடுத்த பூலியில் வசித்து வருகிறார். இவர் போலீஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி உள்ளார். அவர்களில் 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போலீசில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து நகர போலீஸ் டி.எஸ்.பி குல்தீப் குமார் கூறுகையில், ‘தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறி, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி அஸ்லம் கான் திருமணம் செய்துள்ளார். புதியதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்னர், அவருடன் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் அவரை கழற்றிவிடுவார்.

இவ்வாறாக 6 பெண்களை ஏமாற்றி உள்ளார். இதற்காக மாற்ற தனது பெயரை மாற்றி ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின்  குடும்பத்தினரை நம்பவைக்கும் வகையில், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். அவர்கள் சந்தேகம் அடைந்தால், அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அஸ்லம் கான் மீது சாஸ், தன்பாத், டோப்சாச்சி, ராஞ்சி ஆகிய காவல் நிலையங்களில் திருமண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ம்  ஆண்டில் அஸ்லம் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், ஏழாவதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.


Tags : 'Ghiladi , Police officer, 6 girls, married, 'killadi' arrested, 7th attempt, caught by police
× RELATED நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு...