×

இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முறையீடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அவசர அவசரமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசரப்பட்டு ஏன் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது? என கேள்வி எழுப்பினார். இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்தபோதிலும் அவசர அவசரமாக அறிவித்தது ஏன்? எனவும் சாடினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள 239 வீடுகளுக்கு பதில் 49 வீடுகள் தான் உள்ளது. ஈரோடு கிழக்கில் இறந்தவர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப்படவில்லை. தொகுதியில் இல்லாதவர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளது. வாக்காளர் பட்டியலை சரிவர தயாரிக்காமலேயே இடைத்தேர்தலை அவசரமாக அறிவித்துவிட்டனர் என கூறினார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், வேட்பாளரை அறிவித்து விட்டோம்; யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது. 50 ஆண்டுகளை கடந்த பெரிய இயக்கமான அதிமுக யாருக்காகவும், எப்போதும் காத்திருக்காது. வேட்பாளரை அறிவித்துவிட்டோம்; தேர்தலை சந்திக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.


Tags : Erode East ,AIADMK ,ex-minister ,CV Shanmugam , By-election, Vacasam, Erode East Constituency, CV Shanmugam
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...