×

ஹத்ராஸ் சென்றபோது கைதான கேரள பத்திரிகையாளர் கப்பான் ஜாமீனில் விடுவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் சென்றபோது கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பானை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் சட்டவிரோத பணவரித்தனையில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனால் அவர் தொடர்ந்து லக்னோ சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இரண்டு   தற்போது தடை செய்யப்பட்டுள்ள இரண்டு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின் சித்திக் கப்பான்  சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Tags : Kerala ,Kappan ,Hadhras , Kerala journalist Kappan, who was arrested while visiting Hadhras, is out on bail
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...