×

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா ஓபிஎஸ்சுக்கு தீபா நேரில் அழைப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைக்க அவர் திட்டமிட்டார். இந்த விழாவிற்கு தீபா அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு, கணவர் மாதவனுடன் தீபா சென்றார். மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார்.


Tags : Deepa ,OPS , Deepa personally invited the OPS for the baby naming ceremony
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்