×

மார்ச் 26ம் தேதி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல்

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு  உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் மார்ச் 26ம் தேதி (ஞாயிறு) காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வரும் 23ம் தேதி காலை 11 முதல், 26ம் தேதி 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

100 ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். 26ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்படாது. 27ம் தேதி காலை 11 முதல் வரும் மார்ச் 2ம் தேதி 4 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் வழங்கலாம். மார்ச் 5ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.Tags : Tamil Film Producers Association , Election to Tamil Film Producers Association on March 26
× RELATED தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!