இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு

லண்டன்:  2002ல் குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாக ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஒன்றிய அரசு, இந்த படத்தை வௌியிட தடை விதித்துள்ளது. ஆவணப்படத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பிபிசி ஊடக நிறுவனத்தின் சுதந்திரத்தை இங்கிலாந்து அரசு பாதுகாக்கிறது. அதேசமயம் இந்தியாவுடனான உறவு எப்போதும் போல் நீடிக்கும். இந்தியாவுடனான உறவில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். வருங்காலங்களிலும் இந்தியாவுடனான எங்கள் உறவு மேலும் வலுப்படும்” என்று கூறினார்.

Related Stories: