×

கோஹினூர் வைரம் மீட்டெடுக்கப்படுமா?

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர்   கிஷன் ரெட்டியிடம், ‘‘இங்கிலாந்தில் இருந்து கோஹினூர் வைரத்தை திரும்ப கொண்டு வருவதற்கு அரசு ஏதாவது திட்டம் வகுக்கிறதா” என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: 2014 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 229 தொல்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து  மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட   தொல்பொருட்களை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது.   இதுபோன்ற பழங்காலங்கள் வெளிநாட்டில் வெளிப்படும் போதெல்லாம், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், இந்திய தூதரகங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஆகியவற்றின்  மூலம் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கிறது’ என்றார். ஆனால்  புகழ்பெற்ற கோஹினூர் வைரம் குறித்த கேள்விக்கு குறிப்பிட்ட பதில் அளிக்கவில்லை.

Tags : Will the Kohinoor diamond be restored?
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி...