சிவகாசியில் எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசியில் எலக்ட்ரிக்கல் கடையில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே மணிநகர் பகுதியில் ரவி அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான இரண்டு தளம் கொண்ட எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் திடீரென எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 6 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: