அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் இருந்தாலும் , இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை என பதில் மனு அளிக்கப்பட்டது. நாளை வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

Related Stories: