×

சென்னை பள்ளிக்கரணையில் உலக ஈரநில நாள் விழா: பள்ளிக்கரணை ராம்சார் தள அடையாள சின்னத்தை திறந்து வைத்தார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்கா வளாகத்தில் இன்று (02.02.2023) இந்திய அளவில் தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் அறிவிக்கப்பட்டு முதலிடம் பெற்றுள்ள நிலையில், உலக ஈரநில நாளில் பள்ளிக்கரணை ராம்சார் தளத்திற்கான அடையாள சின்னத்தை வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் திறந்து வைத்து, ராம்சார் தளங்கள் மேம்பாடு மற்றும் அவற்றை  பாதுகாத்தல் தொடர்பான உறுதிமோழியும் ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் நாள் உலக ஈரநில தினமாக அனுசரிக்கப்படுகிறது.  

இந்நாள் ஈரான் நாட்டின் காஸ்பியன் கடற்கரை நகரமான ராம்சார் நகரில் 1971 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி ஈரநிலங்களின் வளங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை பாதுகாப்பது குறித்து ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி ஈரநிலங்களுக்கு ராம்சார் நிலங்கள் என பெயரிடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையும், மீட்டெடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  மேலும் ஈரநிலங்கள் எவ்வாறு கண்டறிதல் மற்றும் பாதுகாப்பது குறித்து அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்தந்த நாடுகளில் தேசிய அளவில் வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு ஈரநிலங்களின் முக்கியத்துவம் கருதி பாதுகாப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.  

இத்துடன் ஈரநில சூழலியல் குறித்தான கொள்கைகள் வகுக்கப்பட்டு ஈரநிலங்களை நீடித்த நிலைத்த பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பராமரிக்கவும் அந்நிலங்களை நல்லமுறையாக பயன்படுத்தும்போது அதன் பலன்களை உள்வாங்கும் வகையில் நிலத்தடிநீர் சேமிப்பு,  குடிநீர் மற்றும் உழவுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்படைவதுடன், வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் பாதுகாப்பு தீர்வாகவும், மீன்பிடி தொழில், பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாறுதல் தாக்கம் மற்றும் கார்பன் தாக்கம் வாயுமண்டலத்தில் கலப்பதில் இருந்து பாதுகாக்கவும் ஈரநிலங்கள் பெரும் பங்காற்றுகிறது.  

அவ்வகையில் இந்திய நாடானது 1982ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் ராம்சார் உடன்படிக்கையில் தன்னையும் ஒரு உடன்படிக்கை நாடாக இணைத்துக்கொண்டது.  எனவே, இந்தாண்டினை உலகத்தில் உள்ள ஈரநிலங்களை மீட்டெடுப்பதற்கான தருணமாக  கடைபிடிப்பது காலத்தின் கட்டயாம் மற்றும் அவசர தேவையாக ஈரநிலங்கள் மீட்டெடுப்பது முதன்மைபடுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய தலைமையில், தமிழ்நாடு ஈரநில ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 100 ஈரநிலங்களின் சூழலியலை  மீட்டெடுக்கும்  வகையில் அதை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ரூ.115.50  கோடி ஒப்பளிப்பு செய்து வரும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஈரநிலங்களின் சூழலியலை மீட்டெடுக்கும் நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கோவளம் அருகில் பக்கிங்காம் கால்வாய் சங்கமிக்கம் இடத்தில்  சூழலியல் மீட்டெடுப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.  அதே போன்று, வண்டலூர் ஓட்டேரி ஏரி, எண்ணூர் கடல்  மற்றும் குசஸ்தலை ஆறு சங்கமிக்கும் இடம் மற்றும் இதர ஈரநிலங்களும் கண்டறியப்பட்டு மீட்டெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்தம் 75 ராம்சார் தளங்களில் நமது தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 ராம்சார் தளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் உள்ளது என்பதால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் முதன்மை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துடன் ஈரநில ஆணையம் ஏற்படுத்தப்பட்டு 13 ஈரநிலங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பதுடன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் 14 ராம் சார் தளங்கள் உள்ளன அவற்றின் விபரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம்,  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்,  பிச்சாவரம் அலையாத்தி காடுகள்,  வடுவூர் பறவைகள் சரணாலயம்,  உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்,  கோடியக்கரை வன உயிரின மற்றும் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் ஈரநிலம். வேம்பனூர் ஈரநிலம்  மற்றும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஆகியவை ஆகும். ஆகையால் உலக ஈரநில தினம் நம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் ஓவியப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றும், ஈரநிலங்கள் மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில் 2023 உலக ஈரநில தினம் கொண்டாட வகைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் சமூகம் சார்ந்த மற்றும் நம்மாநிலத்தின் நலன் கருதி தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் விதமாகவும், நிலத்தடிநீர் சேமிப்பு,  தண்ணீர் சுத்திகரித்தல், வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் தடுப்பு அரணாகவும், மீன்பிடித்தல் , பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் காலநிலை தாக்கத்தை மட்டுப்படுத்தும் விதமாகவும், செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இவ்வியக்கத்தின்கீழ், ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரநில நண்பர்கள் குழு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இதுவரை 63 குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.   மேலும் 250 ஈரநில நண்பர்கள் குழு மாநிலத்தின் அனைத்து ஈரநிலங்களிலும் இன்று முதல் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தில் உள்ளூர் சமூகம் சேர்ந்த ஈரநில நண்பர்கள் மிகப்பரந்த அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து சமூக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நில நண்பர்களின் செயல்கள் மற்றும் பங்களிப்பினை பாராட்டும் வண்ணமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்த மேற்கண்ட நண்பர்களின் சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் வண்ணமும் வனத்துறை அமைச்சர் உலக ஈரநில தின நாளில் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் பாராட்டப்பட்டார்கள்.  

எதிர்வரும் நாட்களில் அரசினால் கூடுதல் எண்ணிக்கை ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு அவர்களின் செயல்கள் ஊக்கப்படுத்தப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுக்கும் வகையில் பங்கெடுக்க தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் வழிவகை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ராம்சார் தலங்களிலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சகத்தின் அறிவுரையின் படி தேசிய கொடி வணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.  மேலும், வனத்துறை அமைச்சர் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உலக ஈரநில தினத்தில் ஈரநிலம் பெயர் பலகை திறந்து வைத்து, ஈரநிலங்கள் உச்சம் அடையும் வண்ணமும் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து  அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  

ஈரநிலங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் பாதுகாப்பு மற்றும்  மேம்படுத்துதல் உறுதிசெய்யப்பட உள்ளது. ஈரநிலம் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்   வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹசன் மௌலானா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் சுப்ரியா சாஹு, வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்தர, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மித்தா பானர்ஜி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாஸ் ரா ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்/ இயக்குநர் தமிழ்நாடு ஈரநில ஆணையம் தீபக் ஸ்ரீவத்சவா, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கே.கீதாஞ்சலி, கூடுதல் இயக்குநர் பசுமை தமிழ்நாடு இயக்கம் வி.சி.ராகுல், சென்னை வன உயிரின காப்பாளர் ஈ.பிரசாந்த் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Wetland Day ,Chennai School ,Ramsar Site Identity Emblem ,Minister ,Mathiwendan , World Wetlands Day Celebration at Pallikarana, Chennai: Forest Minister Mathiventhan inaugurated Pallikarana Ramsar Site
× RELATED சென்னையில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உள்பட 4 பேர் கைது