திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவு..!!

திருவள்ளூர்: தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப்ப் பிரியாணி உணவை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மூன்று உணவகங்களை மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திவருகின்றனர். இந்த உணவகங்களில் மாட்டிறைச்சி உணவை சேர்க்க கோரி செவ்வாய் பேட்டையை சேர்ந்த ஊழியரும் சமூக ஆர்வலருமான மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த கோரிக்கையை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்ததை அடுத்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் மோகன் முறையிட்டார்.

 இந்நிலையில் மகளிர் சுயஉதவி குழுவினர் நடத்தும் உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தபட்ட ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து ஆட்சியர் வளாகத்தில் உள்ள மூன்று உணவகங்களிலும் பீப் பிரியாணி சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பான விலை பட்டியலும் ஒட்டப்பட்டுள்ளது. திருவள்ளுர் ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் மக்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று.மாட்டிறைச்சி உணவை வழங்க வேண்டியது கடமை என்றும் அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: