×

அதானி குழுமத்துக்கு ரூ.80,000 கோடி கடன் வழங்கியுள்ள வங்கிகள்: எஸ்.பி.ஐ கொடுத்த கடன் மட்டும் 21,375 கோடி..!

டெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதானி குழும நிறுவன பங்குகள் 6வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இந்தநிலையில், இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும் பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இரக்கத்தால் எப்பி ஓவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம் என அதானி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். இதனிடையே அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள ரூ. 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் ரூ.80,000 கோடி ஆகும். அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகையான ரூ.2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ. அளித்த கடன் தொகை மட்டுமே. 21,375 கோடி ஆகும். இண்டஸ்இண்ட் வங்கி ரூ.14,500 கோடியை அதானி குழுமத்துக்கு கடனாக அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி அதானி குழுமத்துக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளது.

Tags : Adani Group ,S. GP , Banks that have given Rs 80,000 crore loan to Adani Group: Only SBI loan is 21,375 crore..!
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...