சர்வதேச போட்டிகளில் ஜொலிக்கும் திருச்சி தடகள வீரர்: தேசிய அளவில் சாதித்தும் கூலிக்கு வேலைக்குச் செல்லும் நிலை

திருச்சி: சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் ஜொலித்து வரும் திருச்சியை சேர்ந்த இளம் வீரருக்கு வறுமை ஒரு தடையாக உள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சாகுல் ஹமீத் சிறிய வயதில் இருந்து நீளம் தாண்டுதல் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதித்து வந்தார். 2021ம் ஆண்டு கோவாவில் நடந்த தேசிய அளவிலான தடகள தொடரில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்த சாகுல் ஹமீத் அதே ஆண்டு பூடான் நடந்த சர்வதேச அளவிலான தொடரிலும் தங்கம் வென்றுள்ளார்.

சமீபத்தில் பூடானில் நடந்த தெற்காசிய தடகள போட்டியில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போதிலும் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கத்தை தட்டி சென்றுள்ளார். இருப்பினும் தந்தை இழந்த பின் குடும்பத்தின் வறுமை காரணமாக ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வருகிறார். அரசு உதவி செய்யும் பட்சத்தில் முறையான பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என சாகுல் ஹமீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: