மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அறிஞர் அண்ணா 54ம் ஆண்டு நினைவுநாள் அமைதிப் பேரணி

சென்னை: அறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு நாளையொட்டி, வரும் 03.02.2023 வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: