×

வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் பிப்.5ம் தேதி டாஸ்மாக், பார்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவிப்பு

சென்னை: வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும், பார்களும் வருகின்ற 5ம் தேதி மூட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது; “வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், அனைத்துவிதமான பார்களும் வருகிற 5-ந்தேதி கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

Tags : TASMAC ,Chennai ,Vadalur Ramalingar Memorial Day ,District Collector ,Amirtha Jyoti , Tasmac, bars to be closed in Chennai on February 5 on the occasion of Vadalur Ramalingar Memorial Day: District Collector Amirtha Jyoti announced
× RELATED மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய்