×

அமெரிக்க படைகளுடன் தென்கொரியா மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டு விமான பயிற்சிக்கு வடகொரியா அரசு கண்டனம்..!!

தென்கொரியா: தென்கொரிய வான்வெளியில் அந்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்க படைகள் மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டுபயிற்சியை நிறுத்தாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்து இருக்கிறது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பதில் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டிற்கு பதிலடி அளிக்கும் வகையில் தென்கொரியாவுடன் அமெரிக்க படைகள் போர்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரிய வான்வெளியில் அமெரிக்க ராணுவத்தின் பி1,பி வகை குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப் 22, எப் 35, எப் 35A வகை போர் விமானங்கள் தென்கொரிய படையினருடன் இணைந்து நேற்று தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டனர். அமெரிக்கா உடனான போர் பயிற்சியை உறுதி செய்துள்ள தென் கொரியா வெளியுறவு அமைச்சகம். வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இதுபோன்ற பயிற்சிகள் அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, தென் கொரியா படைகளின் போர் பயிற்சிக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வடகொரியா அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரிய தீபகற்பம் பகுதியில் அமெரிக்கா மறைமுகமாக போரை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டி இருக்கிறது. தென்கொரிய ராணுவத்துடனான கூட்டு போர்பயிற்சியை நிறுத்தாவிட்டால் அதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  


Tags : North Korean government ,South Korea ,US , US-South Korea, war drills, North Korean government condemns
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை