ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஓசூர் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு முறையான அனுமதி வழங்கப்படாததால் எருது விடும் விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று கோபசந்திரம் என்ற பகுதியில் எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்த எருது விடும் நிறுத்தப்பட்டதால் விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடைசெய்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் சாலைகளில் மண் மற்றும் கற்களை குவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இளைஞர்கள் போக்குவரத்தை தடைசெய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பினர் பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் எருது விடும் விழாவிற்கு அனுமதியளித்தது.

Related Stories: