×

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் இந்திய வம்சாவளி பெண்: டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட நிக்கி ஹாலே முடிவு

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்க முடிவு செய்திருக்கும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேவும் களத்தில் குதிக்க முடிவு செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்து வருகிறது. இம்முறையும் அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கடத்த முறை குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த முறையும் அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து பரப்புரையையும் தொடங்கி விட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியையும் சேர்ந்தவருமான நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கி வரும் 15-ம் தேதி இது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிகிறது. நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப்-க்கு எதிரான முதல் வேட்பாளராக அவர் இருப்பார். தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராக 2 முறை பதவி வகித்த 51 வயது நிக்கி ஹாலே கடத்த 2020 அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,Nikki Haley ,Donald Trump , American, President, Election, Indian, Ethnicity, Female
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!