ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது

துரைப்பாக்கம்: சென்னை கந்தன்சாவடி, ராஜிவ் காந்தி சாலையில் ஐடிசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 6 மாதமாக அசாம் மாநிலம், நாகர்கிதா பகுதியை சேர்ந்த துலுக்கர் புரோபின் (40), காவலாளியாக பணியாற்றி வந்தார். நிறுவன ஊழியர்கள் லாக்கரை பூட்டிவிட்டு, சாவியை அங்கு வைத்து செல்வது வழக்கம். இதை நோட்டமிட்ட துலுக்கர் புரோபின் கடந்த 23ம்தேதி சாவியை எடுத்து, பீரோவில் இருந்த ரூ.24 லட்சத்தை திருடிக்கொண்டு, அசாம் மாநிலத்திற்கு தப்பி சென்றார்.

இதுகுறித்து, நிறுவன மேலாளர் ரவிபிரபு, துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார், அசாம் மாநிலத்திற்கு சென்று தலைமறைவாக இருந்த துலுக்கர் புரோபினை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: