சென்னையில் ரயில் பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் தயாராகின்றன: ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் ரயில் பயணிகளின் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் எப்போதும் டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகளின் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டது.

ஆனால், இவற்றில் சில ரயில் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது. ஏற்கனவே எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, பூங்கா, ஆவடி, கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மீதமுள்ள 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன.

இதனால் டிக்கெட் கவுன்டர்களில் நெரிசல் குறையும். முக்கியமான ரயில் நிலையங்களில் நடைமேடையின் ஒரு பக்கத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இருக்கும் நிலையில் நடைமேடையின் மறுபக்கத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்படும். மேலும் இது சிக்கன நடவடிக்கையாகவும் உள்ளது. எழும்பூர், கடற்கரை, மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களால் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.   

Related Stories: