ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை

சென்னை: ஜி 20 மாநாட்டு கல்விக்குழு பிரதிநிதிகள், மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களை, ஐந்து ரதம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் மேளதாளம் முழங்க, மாலை அணிவித்து வரவேற்றனர். ஜி20 மாநாட்டின், முதல் கல்விக்குழுவின் கருத்தரங்கம் நேற்று முன்தினம் சென்னை ஐஐடி வளாகத்தில் துவங்கியது. இதில், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஜி20 முதல் கல்விக்குழு கருத்தரங்கில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேற்று மாலை 4 சொகுசு பஸ்கள் மூலம் சென்னையில் இருந்து மாலை 4 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து ரதம் பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக அரசு சார்பில் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: