தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை, திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவிலும், நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில்ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: