×

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: எர்ணாவூர் நாராயணன் தகவல்

சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர்  நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்ரவரி 27ம்தேதி நடைபெற இருக்கும் ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் பிரசாரத்தில் ஈடுபடும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களையும், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு, கொரோனாவை தடுப்பதற்கான முழு நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதையடுத்து, எர்ணாவூர் நாராயணன், தேர்தல் பணிக்குழு பொருளாளராக எம்.கண்ணன், கொங்குமண்டல செயலாளராக கோவிந்தசாமி, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக சங்கர்குமார், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக முருகேசன், மாவட்ட இளைஞரணி கோவிந்தசாமி, மாவட்ட இணை இளைஞரணி தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி சிவகுமார் ஆகியோரை நியமித்துள்ளார்.

Tags : Congress ,Erode ,Ernavur Narayanan , We will strive for the victory of the Congress candidate in the Erode by-election: Ernavur Narayanan informs
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்